மாத்தளையில் வெடிப்பு சம்பவம்! தீவிர விசாரணையில் பொலிஸார் - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, May 4, 2019

மாத்தளையில் வெடிப்பு சம்பவம்! தீவிர விசாரணையில் பொலிஸார்


மாத்தளை ,பலக்கடுவ ,வெலிக்கந்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

விலங்குகளை விரட்டும் வகையில் பட்டாசு ஒன்றை விவசாயி ஒருவர் வெடிக்கச் செய்ததாக தகவல் வந்தாலும் அந்த சத்தம் பாரிய அளவில் உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவின் போவத்தை ,வரக்கமுற,கலல்பிட்டிய,பலக்கடுவ ஆகிய பகுதிகளுக்கும் கேட்டதால் படையினரும் பொலிஸாரும் இணைந்து அங்குள்ள மலைப்பகுதி ஒன்றில் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

மாத்தளை – அலவத்துகொட பொலிஸாருடன் படையினரும் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.