வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது.
அதன்படி இன்று உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது