தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம் - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, May 19, 2019

தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம்தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, சிறிலங்காவில் 11 இணையத்தளங்களின் மீது நேற்று சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குவைத்தில் உள்ள சிறிலங்கா தூதரகம் உள்ளிட்ட 10இற்கும் அதிகமான .com மற்றும் .lk ஆகிய முகவரிகளைக் கொண்ட, இணையத் தளங்கள் நேற்றுக்காலை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்தன.

ரஜரட்ட பல்கலைக்கழகம், சிறிலங்கா தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றின் இணையத் தளங்களும் முடக்கப்பட்டன.

எனினும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முடக்கப்பட்ட இணையத்தளங்கள் மீண்டும் செயற்பாட்டு நிலைக்குகு கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அவசர கணினி பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.