தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உருவாகியதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் யார் என்பதை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, அம்பலன்வத்த வீதி அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தல் ஒன்று வரும் போது நாம் சிலர் சம்பந்தப்பட்ட தகவல்களை வெளியிடுவோம். இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடாத்தும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை யார் அமைத்தார். இது பல பிரிவுகளாக உருவாகியது எப்படி? இதற்கு நிதி வழங்கியது யார்? என்பன போன்ற தகவல்களை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியின் கீழ் நாம் அனைவரும் கட்சி பேதம் இன்றியும், எல்லாப் பேதங்களை மறந்தும் அனைவருக்கும் சிறந்த முறையில் வாழ்வதற்குரிய சூழலை அமைத்துள்ளோம் என்பதை சகலரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்