கல்முனையில் பதற்றம் இராணுவம் குவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, May 14, 2019

கல்முனையில் பதற்றம் இராணுவம் குவிப்பு!


கல்முனையில் தற்போது மௌலவி ஒருவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் தமிழ் பிரதேசத்தில் நின்று கொண்டு இருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அங்கு நின்ற இளைஞர்களை விசாரித்துவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் சற்று தொலைவில் சென்று அங்கு உள்ள இளைஞர்கள் இடத்திலும் ஏன் அங்கு அந்த இளைஞர்கள் நிற்கின்றார்கள் என விசாரித்த போதே அவர் மீது சந்தேகம் வரவே அவர் தாக்கப்பட்டிருக்கின்றார் என அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்த னர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை உருவானதை அடுத்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டனர்.

படைத்தரப்பினர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தம் வகையில் அதிகளவான படையினர் அனுப்பப் பட்டுள்ளனர்.