சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பாக ஆராயும் வகையிலேயே இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளாக இனங்காணப்படும் நபர்களுக்கு 3 முதல் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.