ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் இந்த விசாரணைகள் நிறைவடைந்தது.
இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் பங்கு தொடர்பான துல்லியமான விபரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை என்று கூறப்படுகிறது.