தமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன்! அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 25, 2019

தமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன்! அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா?

மூதூர் கிளிவெட்டி ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாறிய ஒருவர் ஆலயத்தின் பிரதான பூசகருக்கு உதவி பூசகராக வேலைக்கு சேர்ந்திருக்கின்றார்.

அதாவது அமுது செய்வது பஞ்சாமிர்தம் செய்வது ஏனைய பிரசாதங்கள் செய்வது போன்ற வேலைகளை கடந்த ஒருவருட காலமாக செய்து வந்துள்ளார்.

கடந்த ஒரு கிழமையாக அவரை (உளவுத்துறை)னர் கண்காணிப்பு செய்து வந்துள்ளனர் அந்த வேளையில் அவர் காத்தான்குடிக்கு அடிக்கடி சென்றுவருவதனையும் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்று வருவதையும் அவதானித்துள்ளார்கள்.


அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே கிளிவெட்டி ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் அவர் தங்கியிருந்த ஆலய மடப்பள்ளியினை நேற்று முன்தினம் மாலை சோதனை செய்தனர் அவ்வாறு சோதனை செய்த வேளை அவரது கைப்பையில் குர்ஆன் புத்தகமும் தொப்பியும் காணப்பட்டுள்ளது.

இவர் முன்னர் ஆசிரியர் சேவையில் இருந்ததாகவும் பாடசாலையில் மாணவி ஒன்றினை கற்பழிப்பு செய்ததாகவும் அந்த வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெறுவதாகவும் தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இன்று காலை மேலதிக விசாரணைக்காக ஆலய பரிபாலன சபை தலைவரையும் ஆலயத்தின் பிரதான பூசகரையும் பொலிசார் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் செங்கலடி பதுளைவீதியில் தமிழ்பெண்ஒருவரை இந்து முறைப்படி திருமணம் செய்ததுடன் தானும் இந்துவாக வாழ்ந்து வந்த சிலநாட்களில் திருமணம் செய்த பெண்ணிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியிருந் தமையும் அவரை தேடி முகநூலினூடாக பதிவிட்ட வேளை மேற்படி ஆலயத்தில் இருக்கின்றார் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றிருந்தது.