கெக்கிராவ, மடாட்டுகமவில் பள்ளிவாசல் இடித்தழிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

கெக்கிராவ, மடாட்டுகமவில் பள்ளிவாசல் இடித்தழிப்பு!

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது.


ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டது.

“நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் வெளிநாட்டு நிதியுதவியுடன் குறித்த பள்ளிவாசலை அமைத்திருந்திருந்தனர். இந்தநிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தப் பள்ளிவாசலை உடைத்து அகற்றியுள்ளோம்” என்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.