மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியில் கிளைமோர் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியில் கிளைமோர் மீட்பு

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்கள் இன்று (29) காலை களப்புப் பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, களப்பில் கைவிடப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றைக் கண்டுள்ளனர். அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் இணைந்து இந்தக் குண்டை மீட்டுள்ளனர்.

குறித்த கிளைமோர் குண்டு விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.