திருடிய ஆட்டை முகநூலில் விளம்பரம் செய்து விற்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 14, 2019

திருடிய ஆட்டை முகநூலில் விளம்பரம் செய்து விற்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி!


திருடிக்கொண்டு சென்ற ஆடு ஒன்றை விற்பனை செய்வதற்காக முகநூலில் விளம்பரம் செய்தவரும், ஆடு திருடியவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனார். இதே ஆடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் மந்துவில் பகுதியில் மேய்ச்சலுக்காக அயல் காணியில் கட்டப்பட்டிருந்த 2 குட்டிகள் ஈன்று ஒரு மாதமான ஆட்டை இனந்தெரியாதோர் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆட்டின் உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஆட்டின் புகைப்படத்தை விற்பனைக்கென முகநூலில் பதிவிட்டதைப் பார்த்த ஆட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது தனது ஆடு என்பதால் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

அங்கு சென்ற பொலிஸார் முகநூலில் பதிவிட்டவரைக் கைது செய்து விசாரணைகளை நடாத்தினர். குறித்த ஆட்டை கைதடி மேற்கில் உள்ள பெண்ணிடம் கொள்வனவு செய்ததாகத் தெரிவித்ததையடுத்து குறித்த பெண்ணையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆடு திருடியவர் கைது செய்யப்படாத நிலையில் அதனை விலைக்கு வாங்கிய இருவரும் சாவகச்சேரி நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

வழக்கினை விசாரித்த பதில் நீதிவான் ப.குகனேஸ்வரன் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு ஆட்டினை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.