30 வருடங்களுக்கு முன் முஸ்லிம் மக்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் கூறிய முக்கிய கருத்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 14, 2019

30 வருடங்களுக்கு முன் முஸ்லிம் மக்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் கூறிய முக்கிய கருத்துவிடுதலைப் புலிகள்' பத்திரிகை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு உத்தியோகபூர்வ ஏடு.

இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முதல் பக்கத்தில், 'முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி' என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், 'சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதத் தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாமல் சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குறறிப்பிடப்பட்டிருந்தது.

1990ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 3 மாத காலப்பகுதியில் தென் தமிழீழத்தில், அதாவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 2000 தமிழ் மக்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டதாகவும், மிருகத்தனமான முறையில் முஸ்லிம் காடையர்களால் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி வருவதாகவும், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாமல் வெட்டியும், குத்தியும் கொல்லப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தது விடுதலைப் புலிகள் ஏடு;.

தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் முழுமையாக இணைத்து போராட்டத்தை நடாத்தவேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் சமூகத்துடன் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்தவும், தனித்துவமான அவர்களுடைய மதகலாச்சாரங்களைப் புரிந்துகொண்டு பல்வேறுவிதமான எதிர்ப்புக்கள், சதிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களை அணி திரட்ட முயன்றோம், ஆனால் அவர்கள் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் விடுதலைப் புலிகள் கவலை வெளியிட்டிருந்தார்கள்.