ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு குற்ற விசாரணை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலங்கை கிளையாக செயற்பட்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பின் 1000 கோடி சொத்துக்களே இவ்வாறு அரசாங்கம் பறிமுதல் செய்யவுள்ளது.
பயங்கரவாத குழுவினருக்கு சொந்தமான காணி, வீடுகள், பயிற்சி முகாம்கள், வாகனங்கள், பணம், தங்க நகைகள் மற்றும் மேலும் பெறுமதியான சொத்துக்களை குற்ற விசாரணை திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
தவ்ஹித் ஜமாத் அமைப்பிற்கு தொடர்புடைய 89 உறுப்பினர்கள் இதுவரையில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான பெறுமதியான சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்த பில்லியன் கணக்கிலா பணம் குற்ற விசாரணை திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு சொந்தமான பில்லியன் கணக்கிலான சொத்துக்களையும் இதற்கு முன்னர் குற்ற விசாரணை திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.