ஹட்டன் – கண்டி பேருந்து சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 23, 2019

ஹட்டன் – கண்டி பேருந்து சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி


ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக கண்டிக்கு பயணிக்கும் தனியார் மற்றும் அரச பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹட்டன் மத்திய பேருந்த தரிப்பிடத்தை மையமாகக்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஹட்டன் தொடக்கம் கண்டி வரையில் பயணிக்கும் பயணிகளும் பேருந்து சேவையின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த காலங்களில் ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி வழியாக கண்டிக்குச் செல்லும் அனைத்து பேருந்து சேவைகளையும் நாவலப்பிட்டி பிரதான பேருந்த தரிப்பிடத்தில் நிறுத்த வேண்டாம் என்றும் பேருந்த தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே நாவலப்பிட்டி நகரில் உள்ள பயணிகளை ஹட்டன் பகுதியிலிருந்து செல்லும் பேருந்துகளில் ஏற்றவிடாமல் செய்யும் ஒரு சூழ்ச்சியாக இந்த விடயம் அமைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயணிகளுக்கு பரீட்சயம் இல்லாத இடத்தில் பேருந்து நிறுத்தப்படுவதால் பயனில்லையென பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மத்திய மாகாணத்தின் தனியார் போக்குவரத்தின் ஹட்டன் கிளை காரியலயத்திற்கு பொறுப்பான அதிகாரி பி.ஜீ.காமினி தலைமையிலான குழுவினர் நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் பிரதான பேருந்து நிலையங்களுக்கு உரித்தான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து சுமூகமான தீர்வொன்றை எட்டும்வரை இந்த போக்குவரத்து சேவையை தொடரப்போவதில்லை என பேருந்து உரிமையாளர்கள்  அறிவித்துள்ளனர்.