களுத்துறை – பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றில் அருகில் இருந்து 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைகுண்டுகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய பொதியொன்று தொடர்பாக குறித்த பாடசாலையின் காவலாளி தகவல் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த பகுதிக்கு வந்து சோதனை செய்தபோதே இந்த 13 கைகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.