மட்டக்களப்பு – வெல்லாவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பாலமொன்றின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவௌி – காக்காச்சிவெட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதால் அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்