யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புதிய அரசியலமைப்பு தற்போது பேசப்படாத விடயமாகிவிட்டதென்றும் அதனை பேசுவதற்கு யாருமில்லை என்பதால் இந்த விடயத்தில் தாம் ஏமாற்றமடைந்து விட்டதாக தெரிவித்தார்.
எனினும் தமிழர்களுக்கு சார்பான தீர்வினை மேற்குலக நாடுகள் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே மேற்குலக நாடுகளுடன் தாம் இணைந்து பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு எதிராக மேற்குலக நாடுகள் நீதியை பெற்றுத்தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.