குடியேறிகள் படகு மூழ்கியதில் 50 பேர் வரை இறந்திருக்கலாமென அச்சம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 10, 2019

குடியேறிகள் படகு மூழ்கியதில் 50 பேர் வரை இறந்திருக்கலாமென அச்சம்!


துனிசியாவின் சர்வதேச கடற்பரப்பில் குடியேறிகள் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

துனிசியாவின் கடலோர நகரமான ஸ்ஃபாக்ஸின் கடற்பகுதியிலிருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

உயிர் தப்பியவர்கள் மீன்பிடி படகுகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் அவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

துனிசியாவின் அண்டை நாடான லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இப்படகு மூழ்கியிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.