மக்களோடு மக்களாக நோன்பு பெருநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய இராணுவத்தினர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 30, 2019

மக்களோடு மக்களாக நோன்பு பெருநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய இராணுவத்தினர்!

பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை நோன்பு பெருநாள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

சர்வமதத்தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான நோன்பு பெருநாளில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக ஒன்றிணைந்திருந்தனர்.

இதன் போது சர்வமதத்தலைவர்களின் ஆசியுரை மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல், நோன்பு திறத்தல் என பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன


இந் நிகழ்வில் வன்னிப்பிராந்திய இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், தமிழ் சிங்கள முஸ்ஸிம் பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்ஸிம் சமூகத்தினரை இராணுவத்தினர் அன்புடன் வரவேற்று பல வகை உணவுப்பொருட்களை வழங்கி பண்பாக உபசரித்தனர்