நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்கள் வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளிலேயே பணிபுரிகின்றனர்.
எமது நாட்டில் குறுகிய நோக்கத்தில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்துதல், அவர்களது வணிக செயற்பாடுகளை நாசமாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மத்திய கிழக்கில் தொழில்புரியும் சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் எமது நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் என்பது குறித்து சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.