உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விசேட பூஜை வழிப்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் குறித்த விஜயத்தின் போது கோயில் நிர்வாகம் அமோக வரவேற்பளித்துள்ளது.
பாரம்பரிய உடையில், தொப்பி அணிந்து விஜயம்செய்த பிரதமர் கையில் சிறிய தடியையும் வைத்திருந்தார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்களுக்கான பிரசாரங்கள் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமர் ஆன்மீக தளங்களுக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது