இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இலங்கையின் பாதுகாப்பை பொறுத்தவரை, நட்பு நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று இதன்போது தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த விடயம் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.