கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய பேருந்து விபத்து! பயணிகளின் நிலை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய பேருந்து விபத்து! பயணிகளின் நிலை?


மொனராகல - பிபில பிரதான வீதி தொடங்கொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இன்று காலை 7 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் 05 பேர் காயமடைந்து பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சாரதிகளுக்கு பேருந்தின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிபில காவறதுறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது