சத்தீஸ்கரில் நக்சலைட் முக்கியஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 2, 2019

சத்தீஸ்கரில் நக்சலைட் முக்கியஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்



சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தேடப்பட்டு வந்த நக்சலைட் முக்கியஸ்தர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் மட்வி முய்யா என்றழைக்கப்படும் ஜோகா குஞ்சம் (வயது-29) என்ற நக்சலைட் முக்கியஸ்தர் இன்று (வியாழக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போதே குறித்த நக்சலைட் முக்கியஸ்தர் கொல்லப்பட்டுள்ளார்.

இவர், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி சுக்மா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி 25 படைவீரர்கள் உயிரிழந்ததில் தொடர்புடையவர் என்பதும், அவரது தலைக்கு 8 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடக்கத்தது.