பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, எதிர்வரும் சில தினங்களில் தமது பதவி விலகலுக்கான திகதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான உடன்படிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பதவி விலகத் தயார் என மே உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையிலேயே அதற்கான திகதியை அறிவிக்குமாற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதிலுள்ள தாமதம் தனது தலைமைப் பதவியுடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என பிரதமர் தெரேசா மே அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது