இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 3 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியிலிருந்து 16 பேர் அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு ஏனைய 13 பேரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிங்களவர்களும் தமிழர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.