பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் அளவு கோலின் படி 7.2 அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
தலைநகர் போர்ட மோர்ஸ்பிக்கு 260 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கும் கடலுக்கடியில் 126 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் மேலும், நாட்டில் பல கிராமங்கள் அழிந்தது நினைவுக்கூரத்தக்கது.