ஏவுகணைகளை தகர்க்கும் புதிய தொழில்நுட்பத்தினை பரிசோதனை செய்தது அமெரிக்கா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 6, 2019

ஏவுகணைகளை தகர்க்கும் புதிய தொழில்நுட்பத்தினை பரிசோதனை செய்தது அமெரிக்கா!


நாடு விட்டு நாடு தாவக்கூடிய அல்லது கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றினை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அழைக்கப்படும் இம் முறைமையானது லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை முதன் முறையாக அமெரிக்கா பரிசீலித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப் பரிசீலிப்பானது தரையிலிருந்தும், விமானங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை ஆய்வுகூடத்தின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் வில்லியம் கூலே தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பமானது லேசர் முறை, கட்டுப்படுத்தும் முறை மற்றும் வலுச் சேர்க்கும் முறை எனும் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.