மனிதவெடிகுண்டாக என் மகளை அவர் தான் மாற்றினார்... தற்கொலைப்படை தீவிரவாதியான தமிழ்பெண்ணின் தாய் கதறல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 6, 2019

மனிதவெடிகுண்டாக என் மகளை அவர் தான் மாற்றினார்... தற்கொலைப்படை தீவிரவாதியான தமிழ்பெண்ணின் தாய் கதறல்

இலங்கை குண்டுவெடிப்பில் தற்கொலைப்படை தாக்குதல்தாரியாக செயல்பட்ட தமிழ் பெண்ணை அவரது காதலர் மனித வெடிகுண்டாக மாற்றிவிட்டார் என பெண்ணின் தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதிகளின் படங்களை பொலிசார் வெளியிட்ட நிலையில் அதில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண்ணின் படமும் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்.

இதுதொடர்பாக புலஸ்தினியின் தாய் கவிதா கூறுகையில், புலஸ்தினி பள்ளி, கல்லூரி படிப்பில் முதலிடம் பிடித்து வந்தார். கல்லூரியில் படித்தபோது அச்சி முகமது ஹஸ்தும் என்பவர் எனது மகளை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் சென்றுவிட்டார்.

பின்னர் அவளை மதம் மாற்றம் செய்து சாரா என்று பெயர் சூட்டியுள்ளனர். கடைசியாக மனித வெடிகுண்டாக மாற்றி அவளது உயிரையே பறித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறியுள்ளனர்.

நீர்க்கொழும்பு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் புலஸ்தினியும், அச்சி முகமது ஹஸ்தும் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக வெடித்துச் சிதறியதாக பொலிசார் கூறியது குறிப்பிடத்தக்கது.