கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்றைய தினத்தில் மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ம் திகதி குருணாகலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் குறித்த மருத்துவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
42 வயதுடைய குறித்த மருத்துவர் 13 வருடங்களுக்கும் அதிக காலம், மகப்பேற்று மற்றும் நரம்பியல் மருத்துவராக கடமையாற்றியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது