50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்! பொதுபலசேனா எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்! பொதுபலசேனா எச்சரிக்கை

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடையவில்லை. பொது மக்களின் பாதுகாப்பு இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசாங்கமும் தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லை.

பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இருந்து இன்னும் முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் எண்ணிக்கையை வரையறுத்து குறிப்பிடவும் முடியாது. சர்வதேச சக்திகளின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்