வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 26, 2019

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

வடக்கில் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வரட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.