பொதுஜன பெரமுனவே 2020 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 26, 2019

பொதுஜன பெரமுனவே 2020 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும்

தற்போது நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ள பொதுஜன பெரமுனவே 2020 ஆம் ஆண்டு ஆட்சியமைக்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே சாகர காரியவசம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டியது அவசியமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையகமும் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை சர்வதேசமும் பொதுஜன பெரமுனவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுமென எதிர்வு கூறியுள்ளது.

ஆகையால் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். அதற்கமைய ஒக்டோபர் மாதத்திற்குள் பல மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளோம்.

மக்களும் பொதுஜன பெரமுன மீதே நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகையால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம்” என சாகர காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.