எகிப்தின் கிசா பிரமிட் அருகே ஒரு சுற்றுலாப் பேருந்து ஒன்று வெடித்து சிதறியதில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் எகிப்தியர்கள் உட்பட 17 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உயிரிழப்பு தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது, குறித்த அருங்காட்சியகம் கட்டுமானத்தில் உள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.