நக்சலைட் தாக்குதல் – 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, May 1, 2019

நக்சலைட் தாக்குதல் – 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்புமகராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள்  உயரிழந்துள்ளதுடன் 20இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் இன்று (புதன்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நக்சலைட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 40இற்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் துணை இராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.