கடந்த 15 ஆண்டுகளாக பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரை கொலை செய்த சம்பவத்தில் மேஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பழநி - மலர் தம்பதியினருக்கு சசிகலா என்ற மகள் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பழநி தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் சித்தாள் வேலை செய்து தனது மகளை வளர்த்துள்ளார் மலர்.
இதற்கிடையில் தான் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகனுடன் மலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மலரின் வீட்டுக்கு முருகன் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதற்கிடையில் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தபின்னர், முருகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார் மலர்.
இந்நிலையில் தான் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் மலரின் சடலம் மீட்கப்பட்டது. சந்தேகத்தில் அடிப்படையில் முருகன் கைது செய்யப்பட்டதில் அவர் இந்த கொலையை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த 15 ஆண்டுகளாக நானும் அவளும், கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம். சில மாதங்களாக மலரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மலரிடம் நான் கேட்டபோது அவர் என்னை எதிர்த்துப் பேசினார்.
நான் சொல்லிப்பார்த்தேன், அவள் கேட்கவில்லை. இதனால் சம்பவம் நடைபெற்ற தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.