திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி... ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 16, 2019

திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி... ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!

திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பல்லவி என்கிற 19 வயது இளம்பெண்ணும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த காதல் ஜோடி, தங்களுடைய விருப்பத்தை வீட்டில் கூறியுள்ளனர். ஆனால் இருவருடைய வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவில் தங்களுடைய மனக்குமுறல்களை கூறியுள்ளனர்.
அதில், அம்மா, அப்பா ஆகியோருக்கு சென்று வருகிறோம். இதுதான் எங்களுடைய கடைசி வீடியோ. நானும் நான் விரும்பிய பெண்ணும் தற்கொலை செய்து கொள்கிறோம். காதலர்களை பிரிக்காதீர்கள் எனக்கூறிவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.