பாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு அன்று பாரிஸ் நகரத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கிய நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பல்வேறு வரலாறுகளை தாங்கி 853 வருடங்கள் நிலைத்து நின்ற இந்த தேவாலயம் சிதைந்து போனது உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தீயணைப்பு வீரர்களின் கடுமையான முயற்சியால் தேவாலயம் முழுவதும் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான லெஸ்லி ரோவன் என்கிற பெண் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அந்த தீ பிழம்புகளுக்கு நடுவே கடவுள் மகன் நிற்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நேற்று இரவு இந்த புகைப்படத்தை பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன்.
நான் அதில் இயேசுவின் நிழலை பார்த்தேன். நான் உண்மையாகவே ஒரு தெளிவான படத்தை அதில் பார்த்தேன்.
அதை பகிர்ந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டேன், என் அவுஸ்திரேலிய சகோதரர் அது இயேசு போல் இருப்பதாக கூறினார்.
இந்த உலகம் முழுவதுமே சோகமாக உள்ள நேரத்தில், இது பாரிசில் உள்ள மக்களுக்கு ஆறுதலளிக்கும் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல லூயிஸ் பிளேயர் என்பவர், இயேசுவின் உருவத்தைப் போல் தெரிகிறதா? அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அணிந்திருக்கும் கவுன் மற்ற அனைத்தும் தெளிவாக தெரிகிறது என டொம் டிசாண்டோ பதிவிட்டுள்ளார்.