வீடியோ எடுத்தபடியே நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 16, 2019

வீடியோ எடுத்தபடியே நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்!டெல்லியில் டிக் டாக் மோகம் காரணாமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே நண்பனை சுட்டுக்கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த சல்மான் ஜாகிர் (19) என்கிற இளைஞர் தன்னுடைய நண்பர்கள் சோஹைல் மற்றும் அமீர் உடன் டெல்லி கேட் வரை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சல்மான் கார் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார்.

அருகில் அமர்ந்திருந்த சோஹைல் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சல்மான் நெற்றியில் வைத்தபடியே டிக் டாக் செய்துகொண்டிருந்துள்ளார்.


அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு திடீரென வெளியேறி சல்மானின் கன்னத்தை ஊடுருவியுள்ளது.
பின் பக்கத்தில் அமர்ந்திருந்த அமீர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காரை சோஹைல் உறவினரின் வீட்டிற்கு செலுத்தி, சல்மானின் ரத்தக்கறைகளை துடைத்துவிட்டு ஆடைகளை மாற்றியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சல்மான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியதோடு, பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், துப்பாக்கியால் சுட்ட சோஹைல், துப்பாக்கியை மறைக்க உதவிய அமீர் மற்றும் ரத்தக்கறையை துடைத்து ஆடையை மாற்ற உதவிய ஷெரீப் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததா? அல்லது திட்டமிட்ட கொலையா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.