பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றார் என்று விசாரணைனளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.