அமெரிக்காவில் தென் புளோரிடாவில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் 17 அடி நீளம், 63 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மியாமி என்னும் பகுதியில் 7,29,000 ஏக்கரில் மரங்கள், வனவிலங்குகள் என இயற்கையைப் பாதுகாக்கும் Big Cypress National Preserve என்ற சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய உயிரினங்களை தென்கிழக்கு ஆசியாவை பிறப்பிடமாக கொண்ட பர்மீஸ் என்ற ராட்சத மலைப்பாம்புகள் தொடர்ந்து வேட்டையாடி வந்துள்ளன.
இதனால் அவற்றின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக, ஆண் மலைப்பாம்புகளின் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்தி பெண் ராட்சத மலைப்பாம்பினை கண்டுபிடித்துள்ளனர்
அதாவது ஆண் மலைப்பாம்புகள் இனப்பெருக்கத்துக்காகப் பெண் மலைப்பாம்புகளைத் தேடிச் செல்லும் அந்தச் சமயத்தில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் சிக்னல் வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த ராட்சத மலைப்பாம்பு 17 அடி நீளம் மற்றும் 63 கிலோ எடை கொண்டது.
மேலும், பாம்பின் வயிற்றில் இருந்து 73 முட்டைகள் அகற்றப்பட்டுள்ளன. சரணாலயத்தின் ஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த செய்தியை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
புளோரிடா சரணாலயத்தில் பிடிக்கப்பட்ட பாம்புகளிலேயே இதுதான் மிகப்பெரிய பாம்பு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.