தமிழினப் படுகொலையை ஒரே குரலில் உரத்துக் கூற தயாராகும் பிரான்சு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 8, 2019

தமிழினப் படுகொலையை ஒரே குரலில் உரத்துக் கூற தயாராகும் பிரான்சு!

தமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் முள்ளிவாய்கால் மே 18 ஐ முன்னிட்டு பிரான்சில் நடாத்தப்பட்ட தமிழ் நலன்புரி அமைப்புகளுடனான ஒன்றுகூடல்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பின் பேரில் பிரான்சிலுள்ள தமிழர் நலனபுரி அமைப்புகள் பாரிசு 18 மார்க்ஸ் டொர்மா மண்டபத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு சந்திப்பு நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தாய்த்தமிழகத்தில் சாவடைந்த இனமான இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இச்சந்திப்பில் தமிழர் நலன்புரி அமைப்புகள், அரசியல் அமைப்புகள், கலைஞர்கள், ஈழத்திரைப்படச் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் ஊடகங்கள் உட்பட ஐம்பதிற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இச்சந்திப்பில் தமிழின அழிப்பு நாள் மே 18 இன் பத்தாவது ஆண்டு நிறைவை எழுச்சியுடன் நடாத்தவும்,தாயகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது போராட்டங்கள்முன்னெடுத்தல் வேண்டுமென்ற கருத்து அனைவராலும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மே 18 இன் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வு பிரான்சு தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழினப் படுகொலையை ஒரே குரலில் உரத்துக் கூறல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உபகட்டமைப்புகளுடன் இணைந்து தமிழர் நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் பதினொரு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு எதிர்காலத்தில் தாயகம் நோக்கிய ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு வழிசமைக்கும்