கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ, பஸ்யால காட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாம் ஒன்று உள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் காட்டுக்குள் நுழைந்து விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொண்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பிற்கு முன்னர் அந்த பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுக்குள் 4 பேர் மறைந்திருப்பதாகவும், அவர்கள் தப்பிக்க முடியாதளவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அந்தப் பகுதியில் முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த முகாம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.