கம்பஹா பூகொடையில் இடம்பெற்ற வெடிப்பு சம்வத்தில் வெடித்தது குண்டா என ஆய்வு செய்து வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.கம்பஹா பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இந்த வெடிப்புச் சம்பவத்தை உறுதி செய்வதற்காக பொலிஸ் ஊடக பிரிவை தொடர்புகொண்டு வினவியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.