யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி

நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீதி செப்பனிடும் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தடைகளையும் மீறிச்சென்ற குறித்த வான், தொழிலாளர்கள் மீது மோதியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.