கழிவறையில் கிடந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: நள்ளிரவில் பார்த்ததும் மயங்கி விழுந்த பெண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

கழிவறையில் கிடந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: நள்ளிரவில் பார்த்ததும் மயங்கி விழுந்த பெண்!

கழிவறையில் பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை பார்த்து பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையின் பந்தப் பகுதியை சேர்ந்த வினய்டோபிள் என்பவர் வியாழக்கிழமையன்று நள்ளிரவில் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது 7 அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று அடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்த தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களை அழைத்து வந்து பாம்பை காட்டியுள்ளார்.


இதனை பார்த்ததும் அவருடைய மனைவி மயங்கி தரையில் விழுந்திருக்கிறார்.

பின்னர் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த அக்ஷய் பாட்கர் உதவியுடன் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். 45 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு பாம்பு பிடித்து செல்லப்பட்டது.

பின்னர் இதுகுறித்து பேசிய வினய்டோபிள், அந்த சம்பவத்திற்கு பின்னர் நள்ளிரவு முழுவதுமே நாங்கள் யாரும் தூங்கவில்லை. எங்கள் அனைவருக்குமே இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.