யாழில் உள்ள இராணுவ புலனாய்வு ஊடகம்.”டாண் ரீவி” உரிமையாளர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

யாழில் உள்ள இராணுவ புலனாய்வு ஊடகம்.”டாண் ரீவி” உரிமையாளர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

யாழ்.குடாநாட்டிலிருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய முதலீட்டில் செயற்பட்டுவரும் டாண் தொலைக்காட்சியின் மற்றொரு பினாமி உரிமையாளரான குகநாதன் என்பவரை கைது செய்ய பருத்தித்துறை நீதிமன்று நெல்லியடி காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குகநாதன் நாட்டை விட்டு தப்பி ஓடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

சட்டவிரோதமாக கேபிள் இணைப்புக்களை மின்கம்பங்களில் வழங்கியிருந்த நிலையில் மின் ஒழுக்கு காரணமாக தந்தை மற்றும் மகன் என இருவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.

வடமராட்சி கரவெட்டிப்பகுதியில் அரங்கேறிய இப்படுகொலை தொடர்பில் டாண் தொலைக்காட்சி வெட்டியாடியதையடுத்து உள்ளுர் சேவை வழங்குநர்கள் இருவர் கைதாகயிருந்தனர்.

குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் இன்று டாண் தொலைக்காட்சி பினாமி உரிமையாளரான குகநாதனை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(?) நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுபுறம் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவுடன் கொழும்பில் தனது நகர்வுகளை தற்போதைய ஆட்சியிலும் முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வின் பின்னணியில் இயக்கப்படும் இந்த ஊடகம் வடக்கில் தமிழ் மக்களிடையே நடைபெறும் நிகழ்வுகளை வெளிக்கொணர்வதன் ஊடாக புலனாய்வு தகவல் திரட்டுபவர்களுக்கு தகவல்களை வழங்கவும் வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் தாயத்தில் நடைபெறும் மக்க்ள போராட்டங்களுக்கு பணம் அனுப்புவதும் அதனை செய்தியாக வெளிக்கொணரும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே