கோயம்புத்தூரின் ராமகிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் பிரகதி. இரு தினங்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கல்லூரியை தொடர்பு கொண்டபோது மாணவி முன்கூட்டியே புறப்பட்டுவிட்டதாக பதில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொள்ளாச்சி - தாராபுரம் சாலையின் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது.
சடலத்தை பொலிசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில், அந்த வழியாக வந்த கோமதி என்ற கேரள மாணவி, பிரகதியின் சடலத்தை பார்த்து கதறி அழுத்துள்ளார்.
பிரகதி தனக்கு நன்கு பழக்கமான பக்கத்துவீட்டு பெண் என கூறியுள்ளார்.
பொலிசார் விசாரணையில், மாணவி பிரகதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அதனை உறவினர்களுக்கு கொடுக்கும் பணியை பெற்றோர் மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது,
அரைநிர்வாண நிலையில் பிரகதியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அவரை கடத்திய கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதா என்கிற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரகதியிடம் கடைசியாக செல்போனில் பேசிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பேஸ்புக் வாயிலாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிற நிலையில் மீண்டும் ஒரு பாலியல் இப்படி ஒரு இளம்பெண் கொல்லப்பட்டது அம்மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.