ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது தொடர்ச்சியாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
கடந்த மாதம் பெய்யத் தொடங்கிய கனமழையால் அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், இலட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீதிகள், பாலங்களும் சேமடைந்ததுடன், போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, அங்கு தொடர்ந்தும் தேசிய பேரிடம் மேலாண்மை குழுவினரால் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 86 ஆயிரம் பேரளவில் அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.