இலங்கை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
இலங்கை குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்து 253 என்று இலங்கை சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணக்கீட்டு பிழை தான் இதற்கு காரணம் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பல உடல்கள் மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன. அவை, இரண்டு அல்லது கூடுதல் பேராகக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் வந்த பின்னர், உண்மையான பலி எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்தப் பலி எண்ணிக்கை விவகாரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.